இக்காலமும் இனிவரும் காலமும்
இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன (ரோமர் 8:18).
எனது எதிர் காலம் என்ன? என்ற கேள்வியுடன், இன்றைய வரை மனிதகுலம் அதை அறிய முற்படுவதால், எலியிடமும், கிளியிடமும், போலி சாமியிடமும், தின, வார, மற்றும் மாதாந்திர பத்திரிக்கையில் வெளிவரும் ஜோதிடங்களிலும், இன்னும் அநேக வழிகளிலும் தங்கள் எதிர் காலத்தை அறிய விளைகின்றது.
ஆனால், எக்காலத்தையும் அறிந்த தேவன், தம்மை நம்புவோருக்கு இங்கு பூமியில் அங்கு பரலோகில், நம் வாழ்க்கை எங்கனம்? என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
1. இங்கு பரலோகின் நிழலில் வாழ்கிறோம், அங்கு அதன் நிஜத்தில் வாழ்வோம். 1 கொரி 13:13
2. இங்கு தீமையை அனுபவிக்கிறோம், அங்கு நன்மை அனுபவிப்போம். லூக் 16:25
3. இங்கே துக்கமும், அங்கே சந்தோஷமும் உண்டு. 1 பேது 1:6
4. இங்கு பாடுகளும், அங்கே மகிமையும் அடைவோம். ரோ 8:17
5. இங்கே சிறு, சிறு மந்தையில் உள்ளோம், அங்கு நல்ல மேய்ப்பனின் ஒரே மந்தையில் இருப்போம். யோவா 10:16
6. இங்கு நிரந்தரமற்ற கூடாரத்தில் இருக்கிறோம், அங்கு நித்தியமான வீட்டிலிருப்போம். 2 கொரி 5:1
7. இங்கு தேவப் பிள்ளைகளாக இருக்கிறோம், அங்கு நம் அப்பாவைக் கண்டு, அவரைப்போலாகிடுவோம். 1 யோவா 3:1
“கொஞ்சக் காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இந்த துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவைக் காணும்போது”
கே. ராம்குமார். ஓசூர்
கருத்துகள் இல்லை: