Header Ads

இருக்கக்கூடாத இடத்திலிருந்த இறைமக்கள்

 


தேவனுடைய பிள்ளைகள் தேவனோடும், தேவ ஜனங்களோடும் தேவபிரசன்னத்தில் இருக்க வேண்டியவர்கள். ஆனால், வாழ்க்கையின் ஓட்டத்தில் இருக்கக்கூடாத இடங்களில் சிலவேளைகளில் இருந்துவிடுகிறோம்,  அதனால் ஏற்படும் இன்னல்களை வேத புத்தகம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. 

“இங்கே உனக்கு என்ன காரியம்?” (1 இராஜா 19:9) என்று அன்றைக்கு கேட்ட ஆண்டவர் இன்றைக்கும் நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.


இதோ, இருக்கக்கூடாத இடத்திலிருந்த இறைமக்கள்…
  1. விலக்கப்பட்ட விருட்சத்தின் அருகில் – ஏவாள் ஆதி 3:1,6

கட்டளையை மீறி பாவம் செய்தார். ஆதி 3:7, 8

  1. விசுவாசிக்க மறந்துபோய் எகிப்திற்குச் சென்ற – ஆபிரகாம்.  ஆதி 12:1

பொய்யன், துரோகி என்ற அவப்பெயரைப் பெற்றார்.  ஆதி 12:19

  1. விலைமாதுவின் வீட்டில் – சிம்சோன்.   நியாயாதி 16:1, 19

வீரத்தையும் விழிகளையும் இழந்துபோனார்.  நியா 16: 21

  1. மனித வார்த்தையின் நிமித்தம் மனமுடைந்து  சூரைச் செடியின் கீழ் இருந்த –  எலியா.  1 இராஜா 19:2, 4

போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும் என்றார்.  1 இராஜா 19:4

  1.  சோம்பலினால் உப்பரிகையில் உலாவிய – தாவீது 1 சாமு 11:1, 2 

பாவத்தில் விழுந்து போனார்.  1 சாமு 11:3, 4

  1. கீழ்படிய மனமற்று திசைமாறி சொல்லும்படி கப்பலின் அடித்தட்டில் படுத்துறங்கிய –  யோனா யோனா 1:3, 5

பெரிய மீனின் வயிற்றுக்குள் மூன்று நாள் இருக்க வேண்டியதாயிற்று. யோனா 1 :17

  1.  போர்ச்சேவகரோடு குளிர்காய்ந்து கொண்டிருந்த – பேதுரு.  யோவா 18:18, மாற் 14:67 

ஆண்டவரை மறுதலித்தார்.  மாற் 14:77 

 தேவ பிள்ளைகளே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

கே. விவேகானந்த் (Vivekk7)

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.