Header Ads

திருப்தியுள்ள வாழ்க்கை

 


இன்று நாம் திருப்தியற்ற உலகத்தில் வாழ்கின்றோம். எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் தொழிலாளிக்கு திருப்தியில்லை. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் பணக்காரனுக்கும் திருப்தியில்லை. கணவனின் சம்பளத்தில் மனைவி  திருப்தி அடைவதில்லை, மனைவியின் பணிவிடையில் கணவன் திருப்தி அடைவதில்லை.

* பணத்தாலும், செல்வத்தாலும் திருப்தியில்லை. பிர 5:10

* கண்ணின் காட்சிகளிலும் திருப்தியில்லை. நீதி 27:20

* மனதுக்கோ திருப்தியில்லை. பிர 6:7

வேதம் சொல்கிறது: திருப்திசெய்யாதவைகளுக்காக பணத்தையும், பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? எனக்கு கவனமாக செவிகொடுங்கள். ஏசா 55:2

தேவனே திருப்திபடுத்துகிறவர். சங் 104:13, 28

தேவன் தமது ஜனங்களை எவ்விதம் திருப்திபடுத்துகிறார்?

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மத் 15:37, 33

  1. அதிகாலையிலே – கிருபையினால் திருப்தி. சங் 90:14
  1. ஆலயத்தில் – நன்மையினால் திருப்தி. சங் 36:8
  1. ஆத்துமாவில் – அவர் பிரசன்னத்தை உணர்வதால் திருப்தி. சங் 63:5
  1. ஆகாரமாகிய – வசனத்தினால் திருப்தி. சங் 81:16
  1. அவரை அறிகிறதினால் – நீடித்த நாடகளால் திருப்தி. சங் 91:16
  1. அவர் அருளுகிறவைகளில் – எல்லாவற்றிலும் திருப்தி. எரே 31:14
  1. அவர் சாயலால் – எப்போதும் திருப்தி. சங் 17:15
எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும்…  போதிக்கப்பட்டேன். பிலி 4:11

கே. விவேகானந்த் (Vivekk7)

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.