உள்ளும் புறமும்
மட்டுமல்ல, வேதத்தில் உள்ளும் புறம்பும் என்று எழுதப்பட்டிருக்கும் வேத பகுதிகளிலிருந்தும், தேவையான சில உண்மைகளை கற்றுக்கொள்ள முடிகிறது.
1. உள்ளும் புறம்பும், கீழ் பூசு. – ஆதி 6:14
( நியாயத்தீர்ப்பினின்று தப்பிக்கொள்ள ஆயத்தம் )
2. உள்ளே யாக்கோபு, வெளியே ஏசா. -ஆதி 27:22
( வெளித்தோற்றதைக் கண்டு எவரிடமும் ஏமாந்திட வேண்டாம் )
3. உள்ளே அழுக்கு, வெளியே அழகு. -லூக் 11:39-40
( பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் கானா உள் அலங்கோலத்தை )
4. உள்ளே ஓநாய், வெளியே ஆடு. -மத் 7:15
( கண்ணை மறைக்கும் கள்ளப் போதனைகளுக்கு கவனம் )
5. உள்ளே பயம், வெளியே போராட்டம். –2 கொரி 7:5
( கண்டு அச்சம் வேண்டாம் அடுத்த வினாடியே ஆறுதல் வரும் 7:6)
6. உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக, புறம்பான மனிதன் அழிந்து… -2 கொரி 4:16
( தேவனாகிய சிற்பாசாரி தேவையற்றதை அகற்றி அழித்து, தேவ சாயலை வடிவமைக்கின்றார், சோர்வு வேண்டாம் )
7. உள்ளும் புறம்பும் மேய்ச்சல். -யோ 10:9
( உள்ளே தேவ சமுகத்தில் மகிழ்ச்சி, வெளியே தேவன் நிமித்தம் மகிழ்ச்சி )
என் வாழ்வின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும் உமக்கு உகந்ததாக உருவாக்கும் ஆண்டவரே!
K ராம்குமார்
கருத்துகள் இல்லை: