Header Ads

காத்துக்கொள்



“உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.” 2 தீமோ 1:14

தேவன் நம்மை அனுதினமும் அற்புதமாக பாதுகாப்பவராயினும், நம்மிடம் விலைமதிக்க இயலாத ஆவிக்குரிய பொக்கிஷங்களை ஒப்புவித்துள்ளார். அதை பவுல், தீமோத்தேயு காத்துக்கொள்ளும்படி ஆலோசனை சொல்லுகிறார். ஆதி தகப்பன் ஆதாம், தேவன் கொடுத்த நற்பொருளை காத்துக்கொள்ள தவறினான் (ஆதி 2:15). விளைவு ஆதாமுக்கும்  அவன் வழித்தோன்றலாகிய மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் இழப்பு. 

ஆதாமினால் இழந்துபோன அனைத்து நற்பொருளையும் கிறிஸ்து நமக்கு மீண்டும் கொடுத்துள்ளார். அதை கண்மணி போல் காத்துக்கொள்வது நம் கடமை.

“நாம் காத்துக்கொள்ள வேண்டிய நற்பொருள்”

1. தேவ ஞானம் -நீதி 3:22

2. தேவ வசனம். -நீதி 4:21

3. தேவ கட்டளை. -நீதி 7:2

4. தேவன் கொடுத்த சரீரம். -1 தெச 5:23

5. தேவன் கொடுத்த ஆத்துமா. -உபா 4:10

6. நமக்குள் இருக்கும் தேவ ஆவி. -எபே 4:3

7. தேவன் தந்த விசுவாசம். -2 தீமோ 4:7

8. தேவ ஈவாகிய இரட்சிப்பு. -வெளி 16:15

9. தேவன் கொடுத்த மேன்மை. -யூதா  6

10. தேவன் தந்தருளிய குடும்பம். -1 பேது 3:20

இவையனைத்தும் ஆண்டவர் கிருபையாய் தந்த நற்பொருளாகும் அதை காத்துக்கொள்வது நம் கடமையாகும். 

K ராம்குமார்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.