தேவஊழியர் M.E. செரியன்
"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்." எபிரெயர் 13:7
"கொச்சு சரர்" என்று அன்புடன் அழைக்கப்பட்ட M.E. செரியன் அவர்கள் கேரளாவில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்து, தேவனுடைய அழைப்பினாலே ஊழியத்திற்கு தன்னை அர்பணித்து, தமிழகத்தின் மதுரையில் வந்து ஊழியத்தை துவங்கினார்.
இவர் தேவனுடைய கரத்தினால் சபையின் மேய்ப்பராய், வேதாகம பள்ளியின் ஆசிரியராய், ஆத்தும பாரமுள்ள சுவிசேஷகராய், ஆவிக்குரிய பாடல்களின் ஆசிரியராய், எழுப்புதல் எழுத்தாளராய், சுவிசேஷ இயக்கங்களின் ஸ்தாபகராய், சுவிசேஷகன் பத்திரிகையின் அதிபராய், எல்லோருக்கும் பிரியமான பிரசங்கியாராய், எண்ணில்லா தேவஜனங்களின் ஆவிக்குரிய தகப்பனாய், இன்னும் எல்லையில்லா நிலையில் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட அற்புதமான தேவனுடைய மனிதர்.
தனது 9 வயதில் இரட்சிக்கப்பட்டு, 15 வயதில் பள்ளி ஆசிரியர் ஆனார். 24வது வயதில் Y.M.E.F - இளைஞர் சுவிசேஷ இயக்கத்தை தொடங்கினார். 31வது வயதில் தனது முதல் கட்டுரையை வெளியிட்டார், 36வது வயதில் அவர் சுவிசேஷகன் பால சங்கம் மற்றும் Suviseshakan பத்திரிகையை தொடங்கினார், 37வது வயதில் மதுரை வேதாகம பாட சாலையை ஆரம்பித்தார், தனது 75வது வயதில் கே.வி. சைமன் விருது பெற்றார்.
தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் பல நாடுகளுக்கும் தேவ வார்த்தையை பிரசங்கிக்கும்படி உலகம் முழுவதும் பயணித்தார். கிறிஸ்தவ இலக்கிய உலகிற்கு 13 புத்தகங்களை அவர் அளித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட பாடல்களையும் எழுதியுள்ளார். இவருடைய பாடல்கள் எல்லா தரப்பு கிறிஸ்தவர்களாலும் பாடப்பட்டு வருகிறது.
1917 ம் ஆண்டு கேரளாவின் குரினூரில் துவங்கிய அவரது வாழ்க்கை பயணம் அக்டோபர் 2, 1993 அன்று தமிழகத்தின் முதுகுளத்தூரில் முடிந்தது. விசேஷமாய், சகோதர சபை விசுவாசிகளின் இதயங்களில் இன்றளவும் நீங்கா இடம் இவருக்கு உண்டு.
இன்று (17-09-17) தேவனுடைய மனிதர் M.E. செரியன் அவர்களின் "100வது பிறந்த நாள்" அவருடைய ஊழியங்களை நினைவுகூர்ந்து தேவனை துதிப்போம்.
- VK7
கருத்துகள் இல்லை: