Header Ads

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்…



கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மதசடங்காச்சாரமான வாழ்க்கை அல்ல; கிறிஸ்துவுடனே வாழுகின்ற வாழ்க்கை. பாவத்தில் வாழ்ந்த நாம், இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், “கிறிஸ்துவுடனே சிலுவையிலறையப்பட்டோம்” (கலா 2:20), “கிறிஸ்துவுடனே மரித்தோம்” (ரோ 6:8; கொலோ 2:20), ” கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோ 6:4; கொலோ 2:20), “கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பிக்கப்பட்டோம்” (எபே 2:5,7), “அவருடனே உன்னதத்திலே உட்கார்ந்திருக்கிறோம்” (எபே 2:9), “கிறிஸ்துவுடனே மகிமைப்படுவோம்” (ரோ 8:6), இவ்விதமாக கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” (1 கொரி 1:9).
ஆகையால்
“நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்… “
(கொலோசெயர் 3:1)
1. மேலானவைகளைத் தேடுங்கள். 3:1
2. மேலானவைகளையே நாடுங்கள். 3:2
3. தேவனுக்குள் மறைந்திருக்கிறீர்கள். வச 3:3
4. பாவ இச்சைகளை உண்டுபண்ணுகிற அவயவங்களை அழித்துப்போடுங்கள். 3:5
5. துர்க்குணங்களை விட்டுவிடுங்கள். 3:8
6. பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோடுங்கள். 3:9
7. புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. 3:10
✍ K. ராம்குமார்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.