சோதித்தறிதல்
ஆரோக்கிய சோதனையும் & ஆன்மீக சோதனையும்
எக்காலத்திலும் கண்டிராத நிலையில், நோய்த்தொற்றின் பரிசோதனை எண்ணிக்கை பெருகி வருகிறது. ஊகாணில் தொடங்கி உள்ளூர் வரையில், கோடிகளில் பரிசோதனை எண்ணிக்கை குவிந்து வருகிறது.
நாள்தோறும் ஊடகத்தில், உன்னிப்பாய் பார்ப்பதெல்லாம், பரிசோதனை முடிவு என்னவென்று.
ஆரோக்கிய பரிசோதனை முடிவுகளை அறிவதுடன், ஆவிக்குரிய பரிசோதனையும் அறிவது அவசியம்.
கர்த்தர் நீதிமானை சோதித்தறிகிறார். சங் 11:5
(“The Lord tests the righteous.” Psalm 11:5)
1. அன்பை: சோதித்தறிகிறார் – கள்ள தீர்க்கனின் சொல்லை வைத்து. உபா 13:1-3
2. விசுவாசத்தை: சோதித்தறிகிறார் – பாடுகளை பரிசாகளித்து. 1 பேது 1:7
3. கீழ்ப்படிதலை: சோதித்தறிகிறார் – கசப்பான அனுபவங்களில், அழைத்துச் சென்று. யாத் 15:26
4. உண்மையை : சோதித்தறிகிறார் – கர்த்தரை, கனப்படுத்தும் காணிக்கையை வைத்து. மல் 3:10
5. நடத்தையை : சோதித்தறிகிறார் – அழிந்துபோகும் அப்பத்தை வைத்து. யாத் 16:4
6. ஊழியத்தை : சோதித்தறிகிறார் – உருக்கி உருவாக்கும் நெருப்பைக்கொண்டு. 1 கொரிந்தி 3:12-13
7. தெய்வ பயத்தை : சோதித்தறிகிறார் – அதி பயங்கரமான நிகழ்வுகளைக்கொண்டு. யாத் 20:20
“அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” யோபு 23:10
K. Ramkumar Hosur
கருத்துகள் இல்லை: