சிறப்புடன் முடிந்த சிறைவாசம்
அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஊழியத்தின் பெரும்பகுதியை சிறையிலே கழித்தவர். கிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டிருந்த அவர், “சிறைவாசம் சிறந்ததோர் ஊழியத்திற்கு உதவிற்று” என்பதை தனது நிருபங்களில் பதிவிட்டிருக்கிறார்.
ஒருவேளை, அவரிடம் “உங்களின் சிறை அனுபவங்களை தனியாக எழுதுங்கள்” என்று கேட்டிருந்தால், இவ்வாறு எழுதியிருப்பார்…
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக, பவுலகிய நான் கட்டப்பட்டிருந்தபோது
- சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு அது ஏதுவாயிற்று. பிலி 1:12
- என் சகோதரரில் அநேகர் கர்த்தருக்குள் திடன்கொண்டு திருவசனத்தை சொல்ல துணிந்துவிட்டனர். பிலி 1:14
- துதியினால் சிறைக்கதவு திறந்தது, சிறைசாலை அதிகாரி இரட்சிப்படைந்தான். அப் 16:23-34
- அகிரிப்பா ராஜாவும் அசைந்து இசைய முற்பட்டான், கிறிஸ்தவனாகுவதற்கு. அப் 26:28-29
- சிறை வாசல் திறக்கப்படுவதிலும், திருமறைக்கு வாசல் திறக்கப்படுவதையே விரும்பினேன். கொலோ 3:3,4
- ஊழியத்திற்கு பிரயோஜனமாக, ஒநேசிமு பிறந்தான். பிலேமோன் 10
- ஆறுதலுக்கு, ஆவிக்குரிய சகோதர ஐக்கியம் இருந்தது. கொலோ 4:10
- சிறையில் இருந்தாலும், நான் தேவ இராஜ்ஜியத்தின் ஸ்தானாபதி என்ற சிறப்புடன் இருந்தேன். எபே 6:19
- தேவ இரகசியங்களை, சபைக்கு எழுதினேன். கொலோ 4:18
- நான்தான் கட்டப்பட்டிருந்தேன், தேவ வசனத்தை எவராலும் கட்டமுடியவில்லை. 2 தீமோ 2:9
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
K. Ramkumar Hosue
கருத்துகள் இல்லை: