Header Ads

இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி

 

தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் தங்களைவிட மேன்மையுடன் இருக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகின்றனர். திருமண வயதையுடையோர், தங்களின் வாழ்க்கைத் துணை, தங்களுக்கு  நிகராக இருக்க விரும்புகின்றனர். இப்படி பலரும் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு இருக்க விரும்புவர்.

ஆனால் ஆண்டவரோ,  தம்மை பின்பற்றுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி விரும்புகிறார்.  அவர் விரும்புகிறபடி நாம் இருக்க வேண்டுமானால், சில நியாயமான நிபந்தனைகளை யோவான் சுவிசேஷத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:23

1.  பிறர் பாதம் கழுவும் பணிவு இருந்தால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். யோவான் 13:17

2. என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால் நானிருக்குமிடத்தில் நீங்களும் இருப்பீர்கள். யோவான் 14:1-3

3. என்  உபதேசத்தைக் கேட்டதினால் சுத்தமாயிருக்கிறீர்கள். யோவான் 15:3

4. என் வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால், என்  சீஷராயிருப்பீர்கள். யோவான் 15:8

5. என் கற்பனைகளை கைக்கொண்டால் என் அன்பிலே நிலைத்திருப்பீர்கள். யோவான் 15:10

6. என் சொற்படி செய்தால் என் சிநேகிதராயிருப்பீர்கள். யோவான் 15:14

7. என்னுடனே நீங்களிருந்தால் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். யோவான் 15:27

நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். யோவான் 12:26

“உம்மோடு இருக்கணுமே ஐயா  உம்மைப்போல் மாறனுமே “

ஆண்டவரே நான் எப்படியிருக்க விரும்புகிறீரோ, அவ்விதமாய் இருக்க உதவிசெய்யும்.

K. ராம்குமார் ஓசூர்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.