இரக்கங்களின் பிதா
நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர். அவருடைய நாமமே இரக்கம் (யாத் 34:1,2) என்பதாகும். மட்டுமல்ல, பிதாவாகிய தேவனுடைய பண்புகளில் இரக்கமும் ஒன்றாகும் (2 கொரி 1:3). குமாரனாகிய கிறிஸ்துவும், உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்று அவரை சுட்டிக்காட்டுகிறார் (லூக் 6:36).
தாவீது தேவனின் இரக்கத்தை நன்றாக அறிந்திருந்தபடியால், அவனுடைய தவறுக்கு தேவன் தண்டனையை அனுப்பிய போது, அவ்ருடைய கையிலே விழுவேன் என்றான். காரணம், அவ்ரின் இரக்கங்கள் மகா பெரியது (2 சாமு 24:14).
- அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புல 3:22).
- ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவர் (உபா 5:10).
தேவனின் இரக்கத்தின் செயல் வேதாகமம் முழுவதிலும் நிறைந்துள்ளது. அவற்றில் சில, நம் சிந்தனைக்கு
தேவனின் இரக்கங்கள் நமக்கு என்ன செய்கிறது?
1. பூமியின் எல்லைவரை சிதறியோரை, ஓரிடத்தில்ஒன்று சேர்க்கிறது. உபா 30:3
2. வீழ்ச்சியடைந்த வாழ்வை, விருத்தியடைய செய்கிறது. உபா 13:18
3. சீர்கேட்டில் சிக்கியோரை, சீக்கிரமாய் விடுவிக்கிறது. நெகே 9:28
4. அறிக்கை செய்யும் பாவங்களை, கரைகளின்றி கழுவுகிறது. சங் 51:1-2
5. தகர்ந்து இடிந்த வாழ்வை, தலை நிமிர்த்தி கட்டுகிறது. சங் 102:13-15
6. மாண்டுபோன வருடத்தை, மீண்டும் புதிதாக்குகிறது. சங் 103:4-5
7. குரலெலுப்பி கூப்பிட்ட உடனே, குதூகலமான பதிலைத் தந்தருளுகிறது. ஏசா 30:19
“அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை , அவை காலைதோறும் புதியவைகள்.” புலம்பல் 3:22-23
K. Ramkumar Hosur
கருத்துகள் இல்லை: