வழி தெரியவில்லையே
வழியை நாங்கள் எப்படி அறிவோம்? யோவான் 14:5
வேலை, தொழில், வியாபாரம், பள்ளி, கல்வி, ஊழியம், என அனைத்து தரப்பிலும் உள்ளோரின் ஆழ்மனதில் எழும் கேள்வி, “வழி தெரியவில்லையே?” இன்னும் சற்று அதிகமாக வலியை கூட்டுவது, அடுத்த வேளை உணவுக்கு கூட வழி தெரியவில்லையே? என்பது தான்.
ஆனால், எதற்கும் கலங்கவேண்டாம், எல்லா கேள்விக்கும் பதில் தருபவரான ஆண்டவர் இயேசு கிறிஸ்து நானே வழி என்கிறார். யோவான் 14:6
என் வழி…….. யோ 10:9
1. என் வழி நெருக்கமானதென்றாலும், நிலையானது. மத் 7:14
2. என் வழி உபத்திரவமானதென்றாலும், உறுதியானது. அப் 14:22
3. என் வழி சஞ்சலமிகுந்த உலகில், சமாதானமானது. லூ 1:79
4. என் வழி அநீதி நிறைந்த உலகில், நீதியுள்ளது. வெளி 15:3
5. என் வழி உண்மையற்ற உலகில், உண்மை வழி காட்டுகிறது. வெளி 15:3
6. என் வழி ஆராயப்பட முடியாவிடினும், உன்னை ஆராதனைக்கு நேராய் அழைத்துச் செல்லுகிறது. ரோ 11:33
அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப்போவதில்லை. ஏசா 35:8
K. Ramkumar Hosur
கருத்துகள் இல்லை: