இவரோ
நாம் தொழுதுகொள்ளும் ஆண்டவர் நிகரே இல்லாதாவர். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை: நீரே பெரியவர் (எரே 10:6) என்று வேதம் சொல்கிறது. மோசேயும் அதனை தான் சொல்லுகிறார், பாடுகிறார் (யாத் 8:10, 15:11).
புதிய ஏற்பாட்டில் வாசிக்கும்போது, அதன் பக்கங்களிலும், விசேஷமாய் எபிரேயருக்கு எழுதின நிருபத்தின் ஆசிரியரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை “இவரோ” என்று அவரை விசேஷப்படுத்தி, வேறுபிரித்து அவரின் நிகரற்ற மகிமையை வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வசனங்களின் சிந்தனையிலே நிகரே இல்லாத சர்வேஸ்வரனை தொழுதுகொள்வோம்.
1. “இவரோ” தகாததொன்றையும் நடப்பிக்காத பரிசுத்தர். – லூக் 23:41
2. “இவரோ” விசேஷித்த ஆணையினால் ஆசாரியராக்கப்பட்டவர். – எபி 7:20
3. “இவரோ” மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவர். – எபி 7:24
4. “இவரோ” விசேஷித்த உடன்படிக்கையின் மத்தியஸ்தர். – எபி 8:6
5. “இவரோ” முக்கியமான ஆசாரிய ஊழியத்தைப் பெற்றவர். – எபி 8:6
6. “இவரோ” பாவங்களுக்கான ஒரே பலி. – எபி 10:12
7. “இவரோ” தம்முடைய பரிசுத்தத்திற்கு நம்மை பங்குள்ளவர்களாக்குகிறார். – எபி 12:10
– கே. விவேகானந்த்
“நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா”
கருத்துகள் இல்லை: