முன்னேறுதல்
” கிறிஸ்தவ வாழ்க்கையில் “
நாம் ஒரே இடத்தில் இருப்பதில்லை, ஒன்று வேகமாக முன்னேறி செல்வோம், அல்லது மெதுவாக பின்னோக்கி செல்வோம், தேவ வார்த்தையோ நாம் பூரணராகும்படி முன்னேறி செல்ல அறிவுறுத்துகின்றது (எபி 6:2).
ஆவிக்குரிய முன்னேற்றத்தை தடுக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி முன்னேறி செல்ல, பவுல் அப்போஸ்தலர் கொலோசேயருக்கு எழுதின நிருபம் இரண்டாம் அதிகாரத்தில் சில விளக்கங்களை எழுதுகிறார், அவைகள் நாம் முன்னேறி செல்ல உதவியாயிருக்கும்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறுதல்
கொலோசேயர் 2ஆம் அதிகாரம்
1. விசுவாசத்தில் உறுதியுடன் 2:5
( கன்மலையைப் போன்று )
2. ஒழுக்கத்தில் 2:5
( இராணுவ வீரனைப்போன்று )
3. நடக்கையிலே 2:6
( இலக்கை நோக்கும் பிரயாணியைப்போன்று )
4. கனி கொடுப்பதில் 2:6
( கிறிஸ்துவில் வேர் கொண்ட மரம் போன்று )
5. வாழ்க்கையை கட்டி எழுப்புவதில் 2:6
( கிறிஸ்துவை அஸ்திபாரமாகக் கொண்டு )
6. கற்றுக்கொள்வதில் 2:7
( பள்ளி மாணவனைப்போன்று )
7. ஆண்டவரை ஆராதிப்பதில் 2:7
( பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஊற்றைப்போன்ற உள்ளத்தோடு)
நாம் செயல்பட்டால் நிச்சயம் நல்லதொரு ஆவிக்குரிய முன்னேற்றம் நம்மிலே உண்டாகும்.
“தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்.” மீகா 2:13
K ராம்குமார்
கருத்துகள் இல்லை: