உலகத்தின் பார்வையும் உன்னதத்தின் பார்வையும்
“உலகம் அவர்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லை.” எபி 11:38
விசுவாசியொருவன் பல வருடங்களாக சாலைகளில் விழுந்த சிறு சிறு இரும்புகளை சேகரித்து வியாபாரமாக்கி, காலப்போக்கில் பெரும்செல்வந்தனானான், எல்லோரும் அவனைப் புகழ்ந்தனர், ஒருநாள் மரணம் அடைந்து பரலோகத்தில் தேவனுக்கு முன் நின்ற அவனை, ஆண்டவர் மகனே என்னைப் நோக்கிப்பார் என்றார், உன்னதமான தேவனின் முகத்தைப் பார்க்க முயற்சித்தான் ஆனால் முடியவில்லை, காரணம் பூமியில் இருந்தபோது பூமியின் சாலைகளில் கிடந்த இரும்புகளையே குனிந்து பார்த்துக்கொண்டேயிருந்தவனுக்கு, நாளடைவில் அவனது கழுத்து எலும்புகள் வளைந்து விட்டதால், பரமனை நிமிர்ந்து பார்க்க முடியாத பரிதாபத்துக்குரியவனானான்,
ஆகவே, உலகத்தைப் பாராமல் உன்னதத்தைப் பாருங்கள், என வேதம் நமக்குப் போதிக்கிறது. கொலோ 3:1
உலகத்தைப் பாராமல் உன்னதத்தை பார்த்து பயணித்தவர்கள்
1. ஆபிரகாம் நவ நாகரீக உலகைப்பாராமல், தேவனுடைய நகரத்தைப்பார்த்தான். -அப் 7:2
2. மோசே பொக்கிஷம் மிகுந்த உலகை உதறிவிட்டு, இனிவரும் உலகைப்பார்த்தான். -எபி 11:26
3. எலீசா பசுமை உலகத்தை பாராமல், எலியா ஏறிச்சென்ற பரம உலகைப் பார்த்தான். -1 இரா 19:20
4. உரியா உல்லாச உலகைத் திரும்பிப்பாராது, உன்னத தேவனின் வேலையைப் பார்த்தான். -2 சாமு 11:11
5. ரூத் தேவனற்ற உலகைப்பாராது, தேவனிருக்கும் இடத்தைப் பார்த்தாள். -ரூத் 1:16:16
6. பேதுரு வியாபார உலகை விட்டுவிட்டு, விண்ணக வேலையைப் பார்க்கலாயினான். -லூக் 5:11
7. மத்தேயு வரிக்கணக்கை எழுதிய பேனாவை வைத்துவிட்டு, வானவரின் சுவிசேஷத்தை எழுதி, தானும் தான் எழுதின சுவிஷேசத்தை வாசிக்கும் எவரையும் பரலோகத்தை பார்க்க வைத்தான். -லூக் 5:27
ஏனெனில், உலகம் (அவர்களின் பார்வையில்) அவர்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லை. எபி 12 38
K ராம்குமார் Evg
கருத்துகள் இல்லை: