புதிய ஆண்டில் புதிய தீர்மானம்
கர்த்தருடைய கிருபையால் ஒரு புதிய ஆண்டுக்குள் நாம் பிரவேசித்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய தீர்மானங்களை நாம் எடுப்பதுண்டு. தீர்மானங்களை எடுப்பதில் எந்த அளவுக்கு முந்திக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு எடுத்த தீர்மானங்களை விட்டுவிடுகிறதிலும் நம்மில் அநேகர் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நம்முடைய தீர்மானங்களை ஒவ்வொரு ஆண்டும் சீர்தூக்கி பார்ப்பதும், புதுப்பித்துக்கொள்வதும் இன்றியமையாதவை.
கடந்த ஆண்டுகளில் இந்த பூமி கூறியவைகளையே நோக்கி நாம் வாழ்ந்திருக்கலாம். போனது போகட்டும். இந்த புதிய ஆண்டில் பவுல் கொலோசெய சபை விசுவாசிகளை உற்சாகப்படுத்துவது போல, “மேலானவைகளை நாட தீர்மானம் எடுங்கள்” (கொலோ 3:1). அந்தப் பட்டியலில் அடங்கி இருக்க வேண்டியவைகளை கொலோசெயர் 3 & 4 அதிகாரங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.
- பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வேன். (கொலோ 3:5 – 9)
- கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மறுரூபமாவேன். (கொலோ 3:10)
- தெய்வீக நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன். (கொலோ 3:12 – 17)
- இல்லற வாழ்வில் ஒழுங்கை கடைப்பிடிப்பேன். (கொலோ 3:18 – 21)
- சமுதாய வாழ்விலும் சாட்சியோடு இருப்பேன். (கொலோ 3:22 – 4:1)
- சீரான ஜெப வாழ்வை கடைப்பிடிப்பேன். (கொலோ 4:2)
- கிறிஸ்துவைப் அறிவிக்க ஆயத்தமாய் இருப்பேன். (கொலோ 4:3 – 6)
இந்த தீர்மானங்களை கடைபிடிப்போமானால், நாம் கிறிஸ்துவோடு எழுந்த விசுவாசி (உயிருள்ள விசுவாசி) என்பதை அடையாளப்படுத்த முடியும் (கொலோ 3:1). இல்லையென்றால்…?
கே. விவேகானந்த்
கருத்துகள் இல்லை: