தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். யோபு 42:2
வாழ்க்கையின்
பலவிதமான அனுபவங்களின் மூலமாய் கேள்வி கணைகளால் சூழப்பட்டிருந்த யோபுவினிடம் தேவன்
இடைபட்ட போது, இறுதியாக யோபுவின் அறிக்கை “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்” (யோபு
42:2) என்பதே.
நம்முடைய
வாழ்க்கையில் இப்போது நாம் கடந்துபோகும் பலவித சூழ்நிலைகள் நமக்குள்ளாகவும் ஏன் என்ற
கேள்விகளை ஏராளம் எழுப்பலாம், ஆனால் இறுதியில் நாம் அறிய வேண்டியதும், அறிவிக்க வேண்டியதும்
“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது.”
மனிதனுக்கு
தேவன் தாமே தம்மை வெளிப்படுத்திய நாமங்களில் ஒன்று “சர்வவல்லமையுள்ள தேவன்” (ஆதி
17:1; யாத் 3:6), என்றால் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதாகும். தேவனாலே கூடாத
காரியம் ஒன்றுமில்லை (லூக் 1:37); தேவனாலே எல்லாம் கூடும் (மத்19:26). என்னாலே செய்யக்கூடாத
அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே32:27) என்று அவரே சவால் விடுகிறார். வேத புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும் அவரின் மகத்தான வல்லமையை விவரிக்கிறது.
- ஆதியாகமம் தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.
- யாத்திராகமம் அவரின் விடுவிக்கும் வல்லமையை வெளிப்படுத்துகிறது.
- லேவியராகமம் அவரின் பரிசுத்தப்படுத்தும் வல்லமையை வெளிப்படுத்துகிறது,
- எண்ணாகமம் அவரின் கிரியைகளின் வல்லமையை வெளிப்படுத்துகிறது,
- உபாகமம் அவரின் வார்த்தையின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.
1. எவரையும்
மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் வல்லவர். 1 நாளா 29:12.
2. வாக்குத்தத்தத்தை
நிறைவேற்ற வல்லவர். ரோ 4:20,21.
3. குணப்படுத்த
வல்லவர். லூக் 6:19.
4. உதவிசெய்ய
வல்லவர். எபி 2:18.
5. நிலைநிறுத்த
வல்லவர். ரோ 14:4.
6. ஜெபத்திற்கு
பதிலளிக்க வல்லவர். எபே 3:20
7. ஒப்புக்கொடுத்ததை
காத்துக்கொள்ள வல்லவர். 2 தீமோ 1:12
ஆகவே நம்முடைய
வாழ்க்கையில் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதை உணர்ந்து, விசுவாசித்து, (மத்
9:28,29) நம்மை அவருக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வோம். “வல்லவராகிய அவருக்கு… சதாகாலங்களிலும்
மகிமை உண்டாவதாக. ஆமென்.
கருத்துகள் இல்லை: