மோசேயின் ஜெபம் – 2
மோசேயின் ஜெபம் – 2
வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மோசேக்கு தேவன் கடினமானதொரு வேலையை கொடுத்திருந்தார். காரணம், வணங்கா கழுத்துள்ள ஜனங்களை வாக்குத்தத்த தேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், இப்போது (யாத் 33) மோசே தன்னுடைய ஊழிய பாதையில் சோர்ந்துபோயிருந்தார். காரணம்…
1. கர்த்தருடைய தீர்மானம் யாத் 33:1-3
அ) தேசத்தை கொடுப்பேன். 33:1
ஆ) தூதனை அனுப்புவேன். 33:2
இ) சத்துருக்களை துரத்துவேன். 33:2
ஈ) நானோ உங்கள் நடுவே செல்லமாட்டேன் 33:3
2. ஜனங்களின் நிலை யாத் 33:4-6
ஆனந்தமில்லை, அலங்காரமில்லை, அச்சம் மட்டுமே.
சீர்கேடு நிறைந்த விக்கிரக ஆராதனையின் விளைவு
3. தூரம்போன தேவபிரசன்னம் யாத் 33:7-11
பாவம் வந்தபோது, தேவபிரசன்னம் தூரம்போனது.
பாளையத்துக்கு புறம்பே பரிசுத்தர்.
4. இந்த சூழலில் தேவனுடைய மனிதனின் ஜெபம் யாத் 33:13-18
இந்நாட்களில் (COVID-19) நாமும் ஜெபிக்க வேண்டிய ஜெபம்
1) உம்மை அறிய வேண்டும். 33:13
2) உமது கண்களில் கிருபை வேண்டும். 33:13
3) உமது வழியை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். 33:13
4) நீர் எங்களை நினைக்க வேண்டும். 33:13
5) உம் சமூகம் எங்களுடன் வர வேண்டும். 33:15
6) இதனை ஜனங்கள் புரிய வேண்டும். 33:16
7) உம் மகிமை நான் காண வேண்டும். 33:18்
இந்த ஜெபமே இக்கட்டான சூழ்நிலையில் தொடர்ந்து முன்நோக்கி செல்ல மோசேயை ஊக்கப்படுத்தினது. நாமும் இப்போது கடந்துபோகும் கொடிதான சூழ்நிலையில் தேவ சமூகத்தை நோக்கிப் பார்த்து முன்னேறுவோம். ஆண்டவர் கிருபை செய்வார்.
K. VIVEKANANTH (Vivekk7)
கருத்துகள் இல்லை: