Header Ads

உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே

 

உம்முடைய  முகத்தையே தேடுவேன் கர்த்தாவே. சங் 27:8

சமய சந்தர்ப்பங்களில் மாறுகிறது மனித முகம்

  • ஆபேலின் மீதான பொறாமையினால் மாறியது காயீனின் முகம்.
  • யாக்கோபின் மீதான கோபத்தினால் மாறுபட்டது லாபானின் முகம்.
  • தன் மகன்மீதுள்ள மனத்தாங்களால்  மாறியது மன்னன் தாவீதின் முகம்.

சிநேகிதனின் சிறு வார்த்தையும் சிரித்த முகத்தை கறுக்கிடுது!

மனுஷ பார்வைக்காக, உபவாசம் என்ற பெயரில் மாய்மால முகம் வாடிடுது!!

கடன்கேட்டவனுக்கு முன், கணப்பொழுதில் என் முகம் கோணலானது!!!

(நீதி 27:17; மத் 6:16; 5:42)

இதுபோன்று, மண்ணுலகில் மனித முகங்கள் மாறுபடும் சூழலில், “உம்முடைய  முகத்தையே தேடுவேன் கர்த்தாவே.” சங் 27:8

தேவ முகம் தேடும்போது…

1. நமது முகத்தில் பிரகாசம் உண்டாகும். யாத் 33:11

2. வாழ்வில் நன்மை உண்டாகும். சங் 4:6

3. மறுமலர்ச்சி உண்டாகும். சங் 80:3

4. கிருபையும் சமாதானமும் உண்டாகும். எண் 6:25, 26

5. திருப்தி உண்டாகும் சங் 17:15

6. ஆசீர்வாதம் உண்டாகும். சங் 67:2

7. தேசத்திற்கு ஷேமம் உண்டாகும். 2 நாளா 7:14

தேவ முகம் தேடும்போது....
கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார். ஏசா 25:8

K. Ramkumar Hosur

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.