மகிமை உமக்கன்றோ
மனித குலத்தை, மீட்க, இம்மண்ணில் வந்தவர், மர சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்து, இப்போது உன்னதத்தில் வீற்றிருக்கிறார்.
ஆகவே, தன் குமாரனின் மரணத்தின் மூலம், மனித குலம் மீதிருந்த சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றிய, மகாதேவனுக்கு முன் மண்டியிட்டு மகிமையை செலுத்துகிறார்கள்.
அவருக்கே மகிமை உண்டாவதாக என்று…
1. பாவியிலும், பிரதான பாவியான என்னை இரட்சித்த, அவருக்கே மகிமை உண்டாவதாக. 1 தீமோ 1:16-17
2. பொல்லாத இப்பிரபஞ்சத்திலிருந்து நம்மை விடுவித்த அவருக்கே மகிமை உண்டாவதாக. கலா 1:4-5
3. உலகறிவில் காலூன்றா என்னை, உம் அறிவில் வேரூன்றி வளர்க்கின்ற உமக்கே மகிமை உண்டாவதாக. 2 பேது 3:18
4. சிக்கலான வாழ்விலே, அவரின் சித்தமே செய்ய நம்மை சீர்படுத்தும் அவருக்கே மகிமை உண்டாவதாக. எபி 13:21
5. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கே மகிமை உண்டாவதாக. வெளி 1:6
6. கிறிஸ்து இயேசுவுக்குள், நம் குறைவுகளை நிறைவாக்கும், அவருக்கே மகிமை உண்டாவதாக. பிலி 4:19-20
7. பரம இராஜ்ஜியம் அடையும் வரை, நம்மை பாதுகாப்புடன் பராமரிக்கும் அவருக்கே சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென். 2 தீமோ 4:18
K. Ramkumar Hosur
கருத்துகள் இல்லை: