அச்சமூட்டும் நிகழ்வுகளும், அசைக்க முடியாத நம்பிக்கையும்
அனுதின வாழ்க்கையை அச்சத்துடன் அணுகும் அவல நிலைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டுள்ளது, கதவின் கைப்பிடியை தொடுவதிலிருந்து, கண்மணி போன்ற பிள்ளைகளின் கைகளை பிடிப்பதுவரை தொடருகிறது அச்சம்.
ஆனால், அச்சம் வரும் தருணங்களில், ஆண்டவரின் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுவதில், அசையாதிருங்கள்.
நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். எபி 10:23
அச்சத்தை அகற்றி, ஆண்டவரின் மீதுள்ள நம்பிக்கையில் அசையாதிருந்தவர்கள் இவர்கள்…
1. யோசுவா : நீங்கள் யாரை சேவித்தாலும், நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். யோசு 24:14-15
2. தாவீது : மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன், தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர். சங் 23:4
3. யோபு : அவர் என்னை கொன்றுபோட்டாலும், அவர்மீது நம்பிக்கையாயிருப்பேன். 13:15
4. கோராகின் புத்திரர் : பூமி நிலை மாறினாலும் நாம் பயப்படோம், தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். சங் 46:2,3
5. எபிரேய வாலிபர்கள் : விடுவிக்காமல் போனாலும் பொற்சிலையை பணிவதில்லை. தானி 3:17-18
6. ஆபகூக் : எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமானாலும், தேவனுக்குள் களிகூருவேன். ஆபகூக் 3:17-18
7. பவுல் : கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்குமாத்திரமல்ல மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன். அப் 21:13
என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
K. Ramkumar Hosur
கருத்துகள் இல்லை: