“தாழ்மையுள்ள இராஜா ” இயேசு கிறிஸ்து
“தாழ்மையுள்ள இராஜா ” இயேசு கிறிஸ்து
சகரியா 9:9
பெரும்பாலும் உயர் பதவிகளிலிருப்பவர்கள், சற்று கடின முகத்துடனும், பெருமையுடனும், மற்றவரை மதியாதவராகவும் இருப்பர், ஆனால் ராஜாவும், ராஜாதி ராஜாவும், ராஜாக்களைத்தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவருமான தேவன், தாழ்மை என்றால் என்ன என்பதை போதித்துக் காட்டாமல் சாதித்துக் காட்டினார்.
கிறிஸ்துவின் தாழ்மை
1. சரீரத் தோற்றத்தில் தாழ்மை. – ஏசா 53:2
பதினாயிரங்களில் சிறந்தவர் அழகிழந்தவரானார்.
2. உலகத்தின் எதிர்பார்ப்பில் தாழ்மை. – ஏசா 53:3
அசட்டை பண்ணப்பட்டவராக.
3. வாழ்விடத்தில் தாழ்மை. – யோவான் 1:46
நன்மை வராத நாசரேத்தில்
4. சமூகவாழ்வில் தாழ்மை. – மத் 8:20
குருவிக்கோ கூடு உண்டு, இவரோ தலை சாய்க்க இடமின்றி இருந்தார்.
5. பதவியில் தாழ்மை . – யோ 13:14
ஆண்டவர் அடிமையின் வேலையை செய்தார்.
6. ஊழியத்தில் தாழ்மை. – மத் 20:28
வேலை வாங்காமல், வேலை செய்தார்.
7. பாடுகளின் நடுவில் தாழ்மை. – 1 பேது 2:23
எதிர்வினை இல்லாது.
அடிமை நிலைவரை தாழ்த்தியதினால் அனைத்துலகத்தாருக்கும், ஆராதனைக்குரியவரானார். பிலி 2:8-11
K. ராம்குமார், ஓசூர்.
கருத்துகள் இல்லை: