முதல் ஜெபமும் முடிவு ஜெபமும்
கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் அனைத்திலும், முன்னிலை வகிப்பது ஜெபமாகும். அதிலும் முதல் மற்றும் முடிவு ஜெபம் அதி முக்கியப்படுத்தப்படுகின்றது. இது சிலுவை மரத்தில் மனந்திரும்பின கள்ளனின் பக்கமாக கவனத்தை திருப்புகின்றது. காரணம், அவனுக்கு முதல் ஜெபமும் முடிவு ஜெபமும் அதுவே. அவைகள் முக்கியமான ஆவிக்குரிய கருத்துக்களை நம் கவனத்தில் கொண்டுவருகின்றது.
கள்ளனின், முதலும், முடிவும் மற்றும் முக்கியமுமான ஜெபம்
லூக்கா 23ஆம் அதிகாரம்
1. தேவ செய்தியை அறிந்து ஜெபித்தான். லூக் 23:38
இயேசு கிறிஸ்துவை ராஜா என்ற அறிவோடு
2. தேவ பயத்துடன் ஜெபித்தான். லூக் 23:40
நீ பயப்படுகிறதில்லையா
3. தேவனுக்கு முன்பாக, தன் தவறுகளை உணர்ந்து ஜெபித்தான். லூக் 23:41
நான் தண்டனைக்குரியவன்
4. தேவனின் பண்பை அறிந்து ஜெபித்தான். லூக் 23:41
அவரோ ! தகாததொன்றையும் செய்யாதவர்
5. தேவ நாமத்தை உயர்த்தி ஜெபித்தான். லூக் 23:42
இயேசுவே ஆண்டவரே
6. தேவ இராஜ்யத்தின் தேடுதலோடு ஜெபித்தான். லூக் 23:42
உம்முடைய இராஜ்ஜியத்தில்
7. தேவனுடைய வருகையை எதிர்நோக்கி ஜெபித்தான். லூக் 23:42
நீர் வரும்போது
இதனால்தான் அவனது ஜெபத்திற்கு பதில் உடனே வந்தது.
“இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்.” லூக் 23:42
K. ராம்குமார் ஓசூர்
கருத்துகள் இல்லை: