Header Ads

தேவப் பிரியராயிராமல்

 


தேவப் பிரியராயிராமல்

இரை தேடிச் சென்ற பறவையொன்று, புழுக்கள் நிறைந்த கூட்டிற்கு மேல் நின்றது, புழுக்கள் பறவையிடம், நாங்கள் உனக்கு இறையாகின்றோம் ஆனால் ஓர் நிபந்தனை, எங்களில் ஒருப் புழுவை நீ எடுக்கும்போது அதற்க்குப் பதில் உனது இறகில் ஒன்றை கழற்றித் தரவேண்டும் என்றன, பின் விளைவைப் புரிந்துகொள்ளாத பறவை புழுவை உண்ணும் பிரியத்தினால் காலப்போக்கில் ஒவ்வொரு இறகாக சிறகுகளை இழந்து, பறக்க இயலாத பரிதாபத்துக்குரியதாயிற்று, காரணம் புழுவின் மீது பறவைக்கு ஏற்பட்ட பிரியத்தினால்

தேவன் மீதுள்ளப் பிரியத்தை திசைமாற்றி, பறவை தனது சிறகுகளை இழந்ததுபோல, நாமும் நம் வல்லமையை இழக்க நேரிடும், தேவப்பிரியராயிராமல்

தேவப் பிரியராயிராமல் 2 தீமோத்தேயு 3:4

இவைகளின்மீது பிரியராயிருந்தால்….

1. தர்ப்பிரியராய் 2 தீமோ 3:2

( முயல் தான் ஈன்ற குட்டியைத் தானேத் தின்றுவிடும் )

2. பணப்பிரியராய் 2 தீமோ 3:2

3. சுகபோகப் பிரியராய் 2 தீமோ3:4

4. மனுஷ பிரியராய் கலா 1:10

5. நித்திரைப் பிரியராய் ஏசா 56:10

6. இரத்தப் பிரியராய் சங் 5:6

7. மதுபானப் பிரியராய் 1 தீ 3:3

8. சண்டைப் பிரியராய் நீதி 26:21

9. சாப்பாட்டுப் பிரியராய் நீதி 23:2

10.செல்வப் பிரியராய் பிரசங்கி 5:10

இராமலிருந்து,

கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். எபே 5:10

K ராம்குமார்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.