தகப்பனின் உள்ளம்
தனது தனயனுடைய நலனை விசாரிக்கும் தன்னிகரற்ற ஓர் அன்பு தகப்பன்
தாவீது தனது மகனாகிய அப்சலோமின் நலனை விசாரிக்கும்போது நெஞ்சை உருக்கும் ஓர் நிகழ்வு.
( 2 சாமுவேல் 13-18 அதிகாரங்கள் )
அப்சலோம் சுகமாயிருக்கிறானா ? 18:29
- கொலை செயலை செய்தவனாயினும் (13:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
- என்னை வெறுப்பவனாயினும் (14:28) அவன் சுகமாயிருக்கிறானா ?
- என் கண்ணீருக்கு காரணமானவனாயினும் (15:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
- வீட்டை விட்டோடி வெகுநாளாயிற்றே (13:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
- என்னை வெறுங்காலால் விரட்டிவிட்டவனாயினும் (15:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
- அழிப்பதற்கு ஆட்களோடு வந்தவனாயினும் (15:12) அவன் சுமாயிருக்கிறானா ?
- என் நற்பெயரின் வாசனையை கெடுத்துப்போட்டவனாயினும் (16:21-22) அவன் சுகமாயிருக்கின்றானா ?
என்னதானிருந்தாலும் அவன் என் பிள்ளையாண்டான்,
பிள்ளையாண்டானை மெதுவாய் நடத்துங்கள். (18:5)
நற்செய்தியை எதிர்பார்த்த தாவீதிற்கு துற்செய்தி வந்தவுடன் என் மகனே, என் மகனே என்று அழுதான். (18:33)பிள்ளையாண்டானை மெதுவாய் நடத்துங்கள். (18:5)
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவும் இவ்வாறுதானே நம்மில் அன்புகூர்ந்து அழுதார்.
"செட்டைகளின்கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத்தாயின் அன்பதுவே எருசலேமே !எருசலேமே ! என்றழுதார் கண் கலங்க"
பதினாயிரம் உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள், ஆனால் தகப்பன்மார்கள் உங்களுக்கு இல்லையே ???
1 கொரிந்தியர் 4:15 😭😭😭😭
தேவனே, தயவு காட்டும் தகப்பனின் இதயத்தை எனக்குத் தாரும் !1 கொரிந்தியர் 4:15 😭😭😭😭
K. ராம்குமார்
கருத்துகள் இல்லை: